புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செவ்வாயன்று (ஜூலை 1) நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும் போது புதிய கட்டமைப்பை இறுதி செய்து கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவுக்கு வழங்குவதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட முக்கிய பாதுகாப்பு தளவாடங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இருவரும் விவாதித்தனர்” என்று பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், “ஜூலை 1 ஆம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசினார். தெற்காசியாவில் அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு பங்காளியாக இந்தியா திகழ்வதாகவும், எனவே, அமெரிக்கா இந்தியாவுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் அவரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.