தாம் முன்வைத்திருப்பது வாக்குறுதிப் பத்திரமல்ல, மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்திருப்பதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறானதொரு மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் தடவை என நான் நினைக்கிறேன்.
நீங்கள் எதிர்பார்க்கும் இலங்கை எவ்வாறு உருவாகும் என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
எனவே, எமக்குக் கிடைத்திருக்கும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் நாமும் கனவு கண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவோம்.
இந்த ஏமாற்று அரசியலுக்கு எதிராக உங்கள் மனதில் உள்ள வெறுப்பையும் கோபத்தையும் முடிவுக்கு கொண்டு வரலாம்.
அதற்காக அன்பின் அடையாளமான நட்சத்திரத்தின் முன் வாக்களியுங்கள்' என்றார்.