Business

கொழும்பில் ‘Colour Next-2024’ வெளியிட்ட Asian Paints Causeway

Thursday, 15 August 2024 - 4:01 pm

இலங்கையின் மிகப்பெரிய நிறப்பூச்சு உற்பத்தியாளர்களில் ஒன்றான Asian Paints Causeway, கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் நிகழ்வில் ‘Colour Next- –2024’ இனை அறிமுகப்படுத்தியது.

‘Color Next’ என்பது கட்டடக்கலை, கலை, உள்ளக வடிவடிமைப்பு, பேஷன், சமூகவியல், ஊடகம், நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து, Asian Paints இனால் தொகுக்கப்பட்ட வர்ணங்கள், மூலப்பொருள், கட்டமைப்புகள், நிறைவு நிலைகள், நிறப்பூச்சுகள் ஆகியவற்றின் வடிவமைப்பு பாதைக்கான பரந்துபட்ட வருடாந்த எதிர்கால தோற்றப்பாடுகளின் வெளியீடாகும்.

நிறம் மற்றும் பொருட்களின் எதிர்கால முன்னறிவிப்பில் தெற்காசியாவின் முதன்மையான மற்றும் தனித்துவமான நுண்ணறிவு அறிக்கையாக ‘Color Next’ கொண்டாடப்படுகிறது. ‘Color Next- – 2024’ இன் அறிமுகமானது, இலங்கையில் ‘Color Next’ இன் முதலாவது பதிப்பாக விளங்குகிறது.

APIPL (Inte ational) பிராந்தியத் தலைவர் சிரீஷ் ராவ் போன்றவர்களுடன், கட்டடக் கலைஞர்கள் மற்றும் உள்ளக வடிவமைப்பாளர்களுடன், Asian Paints Causeway விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (இலங்கை) பொது முகாமையாளர் வைத்திலிங்கம் கிரிதரன், சந்தைப்படுத்தல் தலைவர் (இலங்கை) அநுராத எதிரிசிங்க உள்ளிட்ட Asian Paints Causeway சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிதிகள் குழுவினரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பார்வைக்கு பிரமிக்க வைக்கும் மற்றும் கலாசார ரீதியாக வெளிப்பாட்டை ஏற்படுத்தும் இடங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி APIPL Inte ational பிரதம நிர்வாகி பிரக்யான் குமார் தனது விசேட உரையில் கருத்து வெளியிட்டார்.

இங்கு தெரிவித்த அவர், “வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் எப்போதும் பிரமிக்க வைக்கின்றதும், கலாசார ரீதியாக வெளிப்பாட்டை வழங்கும் தோற்றத்தை ஏற்படுத்தும் வண்ண மயமான இடங்களை உருவாக்குவதை விரும்புகிறார்கள். ” என்றார்.

 
 
 
 


Top Stories
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

Trending
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.


NEWS ALERT