அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்றும், அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்துமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அறிவுறுத்தியுள்ளார்.
மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இடமில்லை எனவும், அரச வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகளை நோயாளர்கள் அச்சமின்றி பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சுகாதார அமைச்சு தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்யாது எனவும், தான் சுகாதார அமைச்சராகப் பணியாற்றும் வரையிலும், இந்த அதிகாரிகள் பணிபுரியும் வரையிலும், சட்ட விரோதமான அல்லது பாரம்பரியத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபடமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.