இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய அயர்லாந்து மகளிர் அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட தொரை 1–1 என சமன் செய்தது.
டப்லினில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து கப்பி லுவிஸின் (119) சதத்தின் மூலம் 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் கடைசி வரை போராடியபோதும் 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களையே எடுத்தது. ஆரம்ப வீராங்களை ஹர்ஷிதா செனவிரத்ன 44 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றதோடு கவிஷா டில்ஹாரி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றார்.
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி அடுத்து அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி பெல்பாஸ்டில் நாளை (16) நடைபெறவுள்ளது.