Business

இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் TikTok

Thursday, 29 August 2024 - 11:49 am

ஒரு காலத்தில் பொழுதுபோக்கு தளமாக பார்க்கப்பட்ட TikTok தற்போது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து, கல்வி மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு இடமாக மாறியிருப்பது முக்கிய சிறப்பம்சமாகும். இன்றைய கிளிக்குகள் மூலம் நாளைய வளர்ச்சிக்கு வழி வகுக்கும் படைப்பாற்றலுக்கான ஒரு நிறுத்த தளமாகவும் TikTok ஐ குறிப்பிடப்படலாம்.

இந்த தளத்தை புத்தாக்கம் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் நாட்டை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், சமூகங்களை மேம்படுத்துவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் டிஜிட்டல் அலையை உருவாக்குவதற்கும் பயன்படுத்தினார்கள். இந்த படைப்பாளிகள் வெறும் பொழுதுபோக்கு கலைஞர்கள் மட்டுமல்ல. அவர்கள் கல்வியாளர்கள், தொழில் முனைவோர், மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக குரல் கொடுப்பவர்கள் ஆவர்.

TikTok இல் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவரான டாக்டர் பிரபோதா, தோல் நோய்கள், அழகு சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் ஆயுர்வேத மருத்துவத்தை TikTok இற்கு கொண்டு வந்து, உலகளவில் புதிய பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.நயோமி இலங்கையின் இளம் தொழில்முனைவோர்களில் ஒருவர். கைவினைப் பொருட்களை உள்ளடக்கிய அவரது TikTok கணக்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திறமையான பேச்சாளரும், உளவியல் நிபுணருமான ஹசிந்த ஹேவாவசம், தன்னை பின்தொடர்கின்ற ரசிகர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தி தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். திறமையான வயலின் கலைஞரான ஹிரண்யா தத்சரணி, தனது இசையின் மீதான ஆர்வத்தையும் திறமையையும் TikTok மூலம் உலகுடன் பகிர்ந்து கொள்கிறார்.இறுதியாக, ரமோத் மலாக்க தனது ஆற்றல்மிக்க நடன வடிவமைப்புகளால் TikTok பயனர்களை வெகு தூரம் கவர்ந்துள்ளார்.


Top Stories
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

Trending
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.


NEWS ALERT