பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய (04) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு விசேட உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
முடிந்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைவதே இன்றைய காலத்திற்கு மிகத் தேவையான ஒன்று என அவர் குறிப்பிட்டமை விசேட அம்சமாகும்.