பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிக்காதது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி, தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்குமாறும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில்,இம்மனுவை விசாரணைக்கு எடுப்பதை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன் வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
அடிப்படை உரிமை மனு தொடர்பாக எவ்வித அடிப்படை சட்ட அறிவுமின்றி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச். எம்.டி.நவாஸ் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் சுட்டிக்காட்டினார்.