Local

குரங்கம்மை வைரஸ் பரவல் தீவிரம்; WHO வினால் வழிகாட்டல் கோவை சுகாதார அமைச்சு விரைவில் வெளியிடும்

Saturday, 17 August 2024 - 8:59 am

உலகை தற்போது அச்சுறுத்தி வரும் குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று தொடர்பில் உலகளாவிய ரீதியில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை Mpox வைரஸ் தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க வலய நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. அத்தோடு ஆபிரிக்க கண்டத்துக்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை பாதிப்பு சுவீடனில் பதிவாகியுள்ளது.

குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது என்றும், இது முதலில் கொங்கோ நாட்டில் வேகமாக பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT