Local

த.மு.கூட்டணிக்கு யார் துரோகம் செய்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள்!

Sunday, 18 August 2024 - 9:54 am

கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பெருவாரியாக பெற்றுக்கொடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான அமைப்பாளர்களை கினிகத்தேனையில் வைத்து இன்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு யார் துரோகம் செய்தாலும் அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகின்ற தேர்தல்களில் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை காட்டுவார்கள். அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்காளர்கள் எந்தவகையிலும் தமது மனதிடத்தை இழக்காமல் தொடர்ந்தும் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டும்.

அதற்கு நான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியுடைய தலைவர்கள் உறுதுணையாக இருப்போம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

ஆகவே, கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஆரம்ப கட்டமாகவே அமைப்பாளர்களாகிய உங்களை சந்தித்து இருக்கின்றேன். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட இருக்கின்றோம்.

எதிர்வரும் புதிய அரசாங்கத்தில் நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி உட்பட எல்லா பிரதேசத்திலும் இடை நிறுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு தயாரான நிலையில் இருக்கின்றோம்.

எனவே, எமக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடத்தை புகட்டுவோம் என்று பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் சுழற்சி நிருபர்


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT