அனைத்து கல்வியியல் கல்லூரிகளையும் இணைத்து உருவாக்கப்படவுள்ள கல்வி பல்கலைக்கழக சட்டமூலம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் இணைத்து கல்வி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இறுதி வரைவு சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கான நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்த பின்னர் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் பரீட்சைக்காக தற்போதுள்ள கட்டக (Modular) முறைக்கு பதிலாக எளிமையான பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக ஆசிரியர் யாப்பில் திருத்தம் செய்து அரச சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் சாதகமான முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.