Local

தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் அனுப்பி வைப்பு

Friday, 30 August 2024 - 11:16 am

ஜனாதிபதித் தேர்தலுக்கான   தபால்மூல    வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள், உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் (30) முன்னதாக  வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதித் தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் 07 லட்சத்து 12 ஆயிரத்து 319 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் செப்டம்பர் 04 ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  எனினும் மேற்படி 03 தினங்களிலும் தபால் மூலம் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்காக செப்டம்பர்   11 மற்றும் 12 ஆம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT