Local

நெடுந்தீவில் கடற்தொழிலாளர்களின் படகு விபத்து; ஒருவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் மாயம்

Friday, 02 August 2024 - 10:38 pm

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளததுடன் , மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது , கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இன்று (01) அதிகாலை அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை கடற்தொழிலாளர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. அதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் , மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். ஏனைய மூவரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு ,காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை , காணாமல் போன கடற்தொழிலாளரை தேடும் நடவடிக்கையிலும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை இலங்கை கடற்படை மாலுமி ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.விசேட நிருபர்


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT