நாடு பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்தபோது, அதனை சாதூரியமாக மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். எனவே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வது நம் அனைவரினதும் கடமையாகும் என, தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி ஹப்புதளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,
அரசியலில் முதிர்ச்சியும் அனுபவமுள்ள ஓர் தலைவரையே நாம் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தூர நோக்குடைய சிந்தனையில் தோட்டத் தொழிலாளிகளின் வீட்டு உரிமை, காணி உரிமை மற்றும் தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டம் என பல நல்ல பயனளிக்கும் திட்டங்கள் உள்ளன. அதனால்தான் நாம் அவருடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
பதுளை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு எனக்கு பல மில்லியன் ரூபாக்களை ஜனாதிபதி ஒதுக்கி தந்துள்ளார்.
இந்த நிதியினை, எவ்வித வேறுபாடின்றி இம் மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள கிறிஸ்தவ மக்களின் மத ஸ்தாபனங்களுக்கு ஒதுக்கியுள்ளேன்.
எனவே அரசியல் அனுபவமும் முதிர்ச்சியுமுடைய ஒருவர்தான் இந் நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும். புதிய ஒருவரால் இந் நாட்டை நிர்வகிக்க முடியாது. எனவே இன்னும் ஓர் இரு நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.