தெற்கில் கியூசு தீவில் நேற்று (29) காலை புயல் தாக்கியது. ஏற்கனவே அங்கு சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஜப்பானில் பெரும்பகுதி செவ்வாய்க்கிழமை முதலே கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு சுமார் 252 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 24 மணித்தியாலங்களில் 600 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.பேரிடரை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்கும்படி வானிலை ஆய்வகம் எச்சரித்தது. நிலச்சரிவுகளால் ஏற்படும் மரணங்கள் குறித்த செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. ரயில், விமானச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.நிலச்சரிவினால் மூவர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.