Local

அரசின் அபிவிருத்தி, சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் அல்ல - நிறுத்துமாறு உத்தரவிட முடியாது

Tuesday, 30 July 2024 - 3:30 pm

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநல வேலைத் திட்டங்கள் சட்டவிரோதமானதல்ல என்றும், இவ்வேலைத் திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட முடியாதெனவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவுக்கும் அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பல தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுகளை மீறும் வகையில், அமைந்துள்ள இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையில் இருந்தது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அரசாங்கமிருந்த பின்னணியில் பேரம் பேசவோ அல்லது தேர்தல் நடத்துவது தொடர்பாக கலந்துரையாடக் கூட முடியாத நிலைமை இருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்டதால், தற்போது பொருளாதாரம் ஸ்திரம் அடைந்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வருமான இலக்குகளை அடைவதற்கு அபிவிருத்தி வேலைத் திட்டத்தை தொடர வேண்டியது அவசியமானது. இந்த வேலைத்திட்டத்திற்கு தடையாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் செல்வதை தவிர்க்க முடியாது.
என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT