நாட்டு மக்களுக்காக புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி சர்வஜன அதிகாரமென தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மீண்டும் தமது பழைய கொள்கைகளை பிரபலப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாடு புதிதாக ஒன்றை கேட்கிறது. அதற்காக நாம் நிற்கிறோம். வேறு யாரும் வேறு எதையும் முன்வைக்கவில்லை. எமது மூலோபாய திட்டத்தில் மாற்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.