Local

ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

Thursday, 29 August 2024 - 9:47 am

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29)வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் அரசியல் கட்சி அலுலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இது தொடர்பான வைபவம் இடம்பெறுகிறது.

‘இயலும் ஸ்ரீலங்கா” என்ற தொலை நோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார சுபிட்சத்துக்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்லும் திட்டங்களும் “இயலும் ஸ்ரீலங்கா” கொள்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, படிப்படியாக மீண்டு வந்ததன் பின்னர், மற்றுமொரு அடியை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT