இணையத்தில் கூகுள் நிறுவனத் தேடல் தளத்தின் ஏகபோகச் செயல்பாடு சட்ட விரோதம் என்று அமெரிக்க வட்டார நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பளித்துள்ளார்.
இணையத் தேடல் சந்தையின் சுமார் 90 வீதத்தை கூகுள் நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. அதற்கு எதிராக அமெரிக்க நீதித்துறை 2020 ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது.
இணையத் தேடலிலும், விளம்பரம் தொடர்பான அம்சங்களிலும் ஏகபோகத்தை நிலைநிறுத்த கூகுள் நிறுவனம் போட்டியாளர்களை நசுக்குவதாக நீதிபதி கூறினார்.
கைத்தொலைபேசிகளிலும், கணினிகளிலும் முதன்மைத் தேடல் தளமாக கூகுளை கொண்டுவர அந்நிறுவனம் பில்லியன் கணக்கான டொலர் செலவிட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிடுகிறது.