– வழக்கை தொடர நீதிமன்றம் முடிவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தான் நிரபராதி என முன்னாள் இராஜாங்க அமைச்சர டயனா கமகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 7 குற்றப்பத்திரிகைகள் மன்றில் வாசிக்கப்பட்டதன் பின்னரே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தமை காரணமாக அவர் மீதான வழக்கை தொடர கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.