Local
உணர்வுகளுக்கு அடிபணியாது சிந்தித்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி ரணில் அதனையே செய்துள்ளார்
Wednesday, 07 August 2024 - 9:13 pm
தவறான தீர்மானங்கள் மூலம் மீண்டும் நெருக்கடிகளே ஏற்படும் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னைய நிலைமையை பார்க்கும்போது, அதிலிருந்து மீள முடியுமென எவரும் நம்பவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பிருந்த பழைய நிலைக்கு வராவிட்டாலும் அதை விட நல்லதொரு நிலைக்கு வர முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார். உணர்வுகளுக்கு அடிபணியாமல் சிந்தித்து செயற்பட வேண்டும். அதனையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.