Local

IMF குறித்து அனுரவின் நிலைப்பாடு

Wednesday, 04 September 2024 - 7:37 pm

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

'சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த திட்டமானது, நமது சர்வதேச உறவுகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியம் என்ற கூடையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருதரப்பு கடன் பரிவர்த்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கூடைக்குள் காணப்படுகிறது. எமது அனைத்து எதிர்கால செயற்பாடுகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தருணத்தில் யாராவது ஒருதலைப்பட்சமாக திட்டத்திலிருந்து விலக நினைத்தால், அது குடிமகன் அல்லது நாட்டிற்கான பொறுப்பை கைவிடுவதாகும்.

எனவே நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தால் நாம் நிறைவேற்ற வேண்டிய பல அளவுருக்கள் உள்ளன. அடுத்த ஆண்டு முதன்மை கணக்கு இருப்பு 2.3 ஆக இருக்க வேண்டும். 2032இற்குள் நமது கடன் விகிதம் 98% ஆக இருக்க வேண்டும். எங்களுக்கு பல அளவுருக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை ஒரு நாட்டுக்கு தீங்கானவை அல்ல. அவற்றை அடைவது ஒரு மோசமான விடயம் அல்ல. யார் ஊடாக கொடுத்தாலும் அது மோசமான பொருளாதார இலக்கு அல்ல” என்றார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT