Local

இலங்கை மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி!

Friday, 30 August 2024 - 7:25 pm

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த 3 தீவுகளின் மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்காக 11 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.  

இந்த நிலையில் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பை இலங்கையிடம் இந்தியா நேற்று வழங்கியது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன மற்றும் இலங்கை எரிசக்தி ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் 3 தீவுகளின் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பு ஒப்படைக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT