Local

சஜித் மற்றும் தமிழ் எம்.பி-க்களுடன் அஜித் தொவால் சந்திப்பு!

Friday, 30 August 2024 - 7:18 pm

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று (30) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதா கிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

''இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​இந்தியா ஒரு சகோதரனாக 4 பில்லியன் கடன் வழங்கியது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கிறதோ அந்த கட்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அமைச்சராக நான் அடுத்த சந்தித்து கலந்துரையாடுவோம்'' எனவும்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (29) இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT