Local

தேர்தலில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் மாயம் எந்தவித தகவலும் இல்லை தேர்தல்கள் ஆணைக்குழு

Tuesday, 03 September 2024 - 1:27 pm

இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் வியாபாரங்களை நடத்தி செல்வது சுமார் 15 வேட்பாளர்கள் மாத்திரமே எனவும் அறியக் கிடைத்துள்ளது.

அதேபோல், குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள தொலைபேசி இலக்கங்கள் கூட போலியானவை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பிரதான நான்கு கட்சிகளும் தமது தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT