யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நேற்று புதன்கிழமை நடைபெற்றதுடன், இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள்