ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதியிலிருந்து நேற்று முன்தினம் 14 ஆம் திகதி வரையிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 28 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 3,720 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சற்று அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.