மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதற்காக பங்களாதேஷ் ஏ மகளிர் அணி அடுத்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி இலங்கை வரும் பங்களாதேஷ் ஏ மகளிர் அணி இலங்கை ஏ அணியுடன் செப்டெம்பர் 8 மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தப் போட்டிகள் முறையே பனாகொட, இராணுவ மைதானம் மற்றும் கொழும்பு, தர்ஸ்டன் மைதானங்களில் நடைபெறவுள்ளன. தொடந்து இரு அணிகளும் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளன.