Local

நாட்டின் ஏமாற்று அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம் திலித் ஜயவீர

Tuesday, 17 September 2024 - 12:25 pm

தாம் முன்வைத்திருப்பது வாக்குறுதிப் பத்திரமல்ல எனவும் மாறாக களத்தில் யதார்த்தமாக்கக் கூடிய மூலோபாய வேலைத் திட்டத்தையே முன்வைத்திருப்பதாகவும் சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல. சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறானதொரு மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் தடவையென நான் நினைக்கிறேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் இலங்கை எவ்வாறு உருவாகும் என்பதை இந்தப் புத்தகம் விபரிக்கின்றது. எனவே, எமக்குக் கிடைத்திருக்கும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் நாமும் கனவு கண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவோம்.

இந்த ஏமாற்று அரசியலுக்கு எதிராக உங்கள் மனதிலுள்ள வெறுப்பையும் கோபத்தையும் முடிவுக்கு கொண்டு வரலாம். அதற்காக அன்பின் அடையாளமாக சிந்தித்து வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT