பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு மீண்டு, கடன் சுமையிலிருந்து விடுபட்டு அபிவிருத்தியடைந்த வளமிக்க நாடாக மேம்பட்டுள்ள நம்நாடு, குறுகிய கால மற்றும் நீண்ட கால சர்வதேச உடன்படிக்கை பலவற்றில் கைச்சாத்திட்டிருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக த்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதில் முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்துடனான நான்கு வருட கடன் ஒப்பந்தம் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த உடன்படிக்கையை மாற்றினால் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறினார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற தொனிப்பொருளில், கெஸ்பேவ தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்த விபரங்களை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு மாதம்பே பொருளாதார வலயத்தை உருவாக்கவும் சிலாபம் துறைமுகத்தை பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை சிலாபம் வரை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாடு நெருக்கடியை எதிர்நோக்கியபோது ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும் முதற் தடவையாக எதிர்கட்சித் தலைவர் ஒருவர் அதனை நிராகரித்தார். இந்த நிராகரிப்பு கின்னஸ் சாதனையாகும்.
போராட்டத்தின் போது பாராளுமன்றத்தைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போது அங்கிருந்த இன்று தலைமைத்துவம் கோரும் அனைவரும் பயந்து ஓடினார்கள்.
நான் உடனடியாக செயலில் ஈடுபட்டு நிலைமையை கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் பங்களாதேஷைப் போன்று எம்.பிகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டிருக்கும்.
பிரதமர் பதவியை ஏற்று என்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் டளஸை போட்டிக்கு நிறுத்தி விட்டு அந்த வாய்ப்பையும் நழுவ விட்டார்.
என்னை ரணில் ராஜபக்ஷ என்று விமர்சித்தவர்கள் இன்று விலகிச் சென்றுள்ளனர்.
நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புவதுடன் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைவடைந்துள்ளன. மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட உலக நாடுகளினதும் அமைப்புகளினதும் உதவி, ஒத்துழைப்புக்கள் எமக்கு கிடைத்ததால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடிந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம்.அரச ஊழியர்களின் சம்பளத்தைப் போன்றே ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது
பங்களாதேஷில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டும் தேர்தல் நடத்த முடியாத நிலை அங்கு தற்போது உருவாகியுள்ளது. எம்.பிகள் கொல்லப்பட்டுள்ளனர். சபாநாயகரை காணவில்லை. பிரதம நீதியரசர் துரத்தப்பட்டுள்ளார்.
எனினும் எமது நாட்டில் நாம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தேர்தல் நடத்த முடிந்துள்ளது.. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியாலேயே அதனை செய்ய முடிந்தது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மக்கள் ஆணையைப் பெற்று நாம் ஆரம்பித்த திட்டங்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். பொருளாதாரம் எனும் வீடு உடைந்த நிலையில் இருந்த போது அதனை கட்டியெழுப்ப பலமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.எனது 5 அம்சத் திட்டத்தை 5 வருட காலத்தில் நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்த்து ள்ளேன்.
மாதம்பேயில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும்.. சிலாபம் துறைமுகத்தை பிரதான மீன்பிடித்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மீனவர்களின் உற்பத்திகளை கட்டுநாயக்கவிற்கு இலகுவாக கொண்டு செல்லும் வகையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபத்துடன் இணைக்க தீர்மானித்துள்ளோம்.
கற்பிட்டியில் துறைமுகம் மற்றும் சுற்றுலா வலயம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.. இரணவிலயிலும் சுற்றுலா வலயம் ஏற்படுத்தப்படும். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்று இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
எமது அணியினர் பிரிந்து சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒருபோதும் இம்முறை தேர்தலில் வெற்றி பெற முடியாது. சஜித் பிரேமதாசவுக்கு வழங்கும் வாக்குகள் அநுர குமார திசாநாயக்க விற்கு வழங்கும் வாக்குகளைப் போன்றதாகும். எனவே ஐ.தேக. ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கேஸ் சிலிண்டரின் வெற்றிக்காக செயற்பட வேண்டும்” அது தொடர்பில் அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.