“நான் ஜனாதிபதியானதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்” என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ள போது,
“காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நிச்சயமாக பதில் வழங்கியேயாக வேண்டும். தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆணைக்குழுக்களை நியமிப்பதில் அர்த்தமில்லை. ஆகவே இதற்கு பதில் வழங்க வேண்டும். பதில் வழங்க நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.