உலகில் வங்குரோத்து நிலைக்குச் சென்ற எந்தவொரு ஒரு நாடும் இலங்கைப்போன்று ஒன்றரை வருடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும் அது ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே முடிந்துள்ளதுள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது அதிசயம், அற்புதம் என சர்வதேசம் பாராட்டும் நிலையில் நாட்டு மக்கள் முக்கியமான இந்த தருணத்தில் கிடைத்துள்ள வாய்ப்பை இழந்து விடக்கூடாது. அவ்வாறு இழந்தால் மேலும் பத்து வருடங்களுக்கு நாட்டில் நெருக்கடி நிலையே தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவால் இந்த நாட்டை ஒருபோதும் நிர்வகிக்க முடியாது என்பதை உணர்ந்தே நான் இம்முறை தேர்தலில் சரியான தீர்மானத்தை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேன். நாட்டு மக்கள் அனைவரும் தமது எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று பெல் மதுளை நகரில் இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.