குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்குத் தேவையான தாய்ப்பாலைக் கொடுப்பதைத் தவிர்த்து ஏனைய பால்மா வகைகளை கொடுத்திடும் செயல் தாம் பெற்ற குழந்தைக்கு விஷத்தினை கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம்.
இவ்வாறு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் சிகிச்சை பிரிவிற்கு வருகை தந்திருந்த கர்ப்பிணித்தாய்மார் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகின்ற தினத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு தாய் பாலூட்டல் மூலம் 42 சதவீதமான மார்பகப் புற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒரு தாயினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு மட்டும் நன்மை கிட்டுவதில்லை தாய்க்கும் பல்வேறு வழிகளில் நன்மை கிடைக்கின்றது.
இவ்வாறு தாய்ப்பாலூட்டுவதால் வளரும் குழந்தை எதிர்காலத்தில் பூரண ஆரோக்கியமான பிரஜையாக தோற்றம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.ஐ.எம்.அஸ்ஹர்…?
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)