Local

அநுராதபுரம் நகரில் இன்று ஜனாதிபதி ரணில் பங்கேற்கும் முதலாவது பிரசார கூட்டம்

Saturday, 17 August 2024 - 8:41 am

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஆரம்ப பொதுக்கூட்டம் அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் இன்று (17) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த குழுக்கள் உட்பட இம்முறை ஜனாதிபதிக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் முதலாவது பேரணி நேற்று (16) பிற்பகல் 3.00 மணிக்கு குருநாகல் சத்தியவாதி அரங்கில் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான குழுக்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி அநுராதபுரம் கடபனஹ பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதிக்கு அருகில் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (16) காலை அவர் மத வழிபாட்டில் ஈடுபட்டார். இதன்போது 300 பிக்குகளுக்கு தானம் வழங்கி சமய வழிபாடுகளை மேற்கொண்டார். அதனையடுத்து கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளின் பின்னர் கண்டியில் மகா நாயக்க தேரர்களின் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஆரம்பமான பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் 2.30 மணிக்கு தங்காலையில் நடைபெறவுள்ளது. மாலை 3.30 மற்றும் 4.30 மணிக்கு மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT