Sports

முதன்முறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி

Monday, 29 July 2024 - 9:43 am

2024 ஆசிய ரி20 கிண்ணத்தை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி முதன் முறை ஆசிய கிண்ணத்தை வென்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக இன்று (28) தம்புள்ளையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண ரி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
தீப்தி ஷர்மா 1 விக்கெட்டை கைப்பற்றினார்
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சமரி அத்தபத்து 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் நாயகியாக ஹர்ஷிதா சமரவிக்ரம தெரிவானார். தொடரின் நாயகியாக சமரி அத்தபத்து தெரிவானார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT