Local

நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்விமுறை 2030 இல் 2 இலட்சம் IT பொறியியலாளர்கள் - அநுரகுமார திசாநாயக்க

Tuesday, 17 September 2024 - 12:28 pm

நகரத்துக்கு ஒரு வகையான கல்வியும் கிராமத்துக்கு ஒரு கல்வியும் கற்பிக்கப்படும் கட்டமைப்பை மாற்றி, அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்போம். 2030 ஆம் ஆண்டில் 02 இலட்சம் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வோமென தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், தமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாதெனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது. மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டு மக்கள் எவ்வளவு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் அவதானித்து வருகிறோம். வறுமையிலிருந்து மக்களை முதலில் விடுபட செய்வதே எமது பிரதான கொள்கையாகும்.

ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, மக்களும் சுகபோகமாக வாழ வேண்டும். எம்மைப் போன்ற வறுமையான நாடுகள், முன்னேற வேண்டுமெனில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்யவேண்டும். இன்று எமது கல்வி முறைமையானது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாரமாக மாறியுள்ளது.


ஜப்பான் போன்ற நாடுகளில் பாடசாலைக்கு நடந்தே சென்று விட முடியும். ஆனால், எமது நாடுகளில் வாகனங்களில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், 03 கிலோ மீற்றருக்குள் சிறந்த பாடசாலையை மாணவர்களுக்காக நிறுவுவோம்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT