நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் பெற்றுக்கொண்டுள்ள கடனுக்கான வட்டியை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் மையமானது, இலங்கையின் பெண்களை தொழில் முனைவோர் மூலம் வலுவூட்டுவது ஆகும்.
அதற்காக, உங்களுக்குத் தேவையான மூலதனத்தை அரசாங்கம் வழங்கும் விதம், உங்களுக்குத் தேவையான பலத்தை அது எவ்வாறு வழங்குவதுடன், சில காரணங்களால் தொழில் முனைவோர் ஆரம்பித்து அது நஷ்டமடைந்தால் அதை முன்னெடுத்து செல்ல அரசு உதவும் வழியை குறிப்பிட்டுள்ளோம்.
அதுமட்டுமல்லாது இன்று நுண்நிதி கடன்களால் இன்னல்களுக்குள்ளாகும் இலங்கைப் பெண்களை மீட்பதற்காக நுண்கடன் மீது சுமத்தப்பட்டுள்ள நியாயமற்ற கடன் வட்டியை முற்றாக நிறுத்துவதற்கு முன்மொழிந்துள்ளோம்.
முன்மொழியப்பட்ட திட்டத்தை எவ்வாறு செய்வது என்பதும் உள்ளது என்றார்.
இதேவேளை, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் முயற்சிகளை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.