Business

இளைஞர்,யுவதிகளுக்கு பல நன்மைகளை வழங்கும் மக்கள் வங்கியின் YES டிஜிட்டல் சேமிப்பு கணக்கு

Thursday, 29 August 2024 - 11:52 am

மக்கள் வங்கி, சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, YES டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு மூலமாக இலங்கையிலுள்ள இளைஞர்,யுவதிகளுக்கு பல்வேறு விசேட நன்மைகளை வழங்குகின்றது. YES டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு மூலமாக நவீன டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவங்களை இளைஞர்,யுவதிகளுக்கு வழங்கி, பல்வகைப்பட்ட வங்கிச்சேவைகளை அவர்கள் முன்னெடுப்பதற்கு மக்கள் வங்கி வழிகோலியுள்ளது.

மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) . டி.எம்.டபிள்யூ சந்திரகுமார அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

‘நாட்டிலுள்ள சாதாரண குடிமக்களுக்கும் வங்கிச்சேவை வசதிகளை நெருக்கமாகக் கொண்டு செல்லும் நோக்குடன் 1961 ஆம் ஆண்டில் மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே பல்வேறுபட்ட வயது மற்றும் துறை சார்ந்தவர்களுக்கு ஏற்ற வகையில் பிரத்தியேகமான கணக்கு வகைகளை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக வங்கிச்சேவைகளை கொண்டு செல்வதற்கு பாடுபட்;டு வந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் இளைஞர் தினத்தையொட்டியதாக இந்த நாட்டிலுள்ள இளைஞர்,யுவதிகளின் நலன் கருதி YES கணக்கை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியது.

அன்று முதல், தமது வாழ்வின் இலட்சியங்களை முன்னெடுக்கும் ஆவல் கொண்ட, தமது கனவுகளை நனவாக்குவதற்கு சேமிப்பு மிகச் சிறந்த வழிகளில் ஒன்று என நம்புகின்ற இளைஞர்,யுவதிகளை தன்பால் ஈர்ப்பதற்கு YES கணக்கால் முடிந்துள்ளது.
2024 சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தமது எதிர்காலம் தொடர்பில் அபிலாஷைகளைக் கொண்டுள்ள இளம் தலைமுறைக்கு பல நன்மைகள் இந்த கணக்கின் மூலமாக வழங்கப்படுகின்றன.


Top Stories
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

Trending
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.


NEWS ALERT