கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அமைச்சர், ஒரு சில காரணங்களால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகளை எதிர்பார்க்கலாமெனவும் குறிப்பிட்டார். அத்துடன், மாதக்கணக்கில், வருடங்களில் பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை இவ் வருடம் நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.