Local

நாட்டில் செல்வந்தர்கள் அதிக வரி செலுத்தும் நிலை ஏற்படும் IMF உடன் மீண்டும் பேச்சு நடத்துவோம்

Sunday, 15 September 2024 - 10:15 am

தான் ஆட்சிக்கு வந்தால், செல்வந்தர்கள் அதிக வரி செலுத்துவதையும், வறியவர்கள் தங்கள் நிலைமைகள் மேம்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்

சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை, தமது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததையடுத்து சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தநிலையில், மக்கள் மீதான வரிச்சுமையை இலகுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய சர்வதேச நாணய நிதியத்துடன் தமது கட்சி ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான தற்போதைய உடன்படிக்கையில், “அடிப்படை மாற்றங்கள்” இருக்க வேண்டும், அவை மிகவும் “மனிதாபிமான முறையில்” மக்கள் மீதான சுமை குறைக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் கூறினார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.

ரணில் தரப்பினர், முக்கிய பொருளாதார துறையினரை மேம்படுத்தியுள்ளனர். ஆனால் அவற்றின் விளைவுகள் இன்னும் பல சாதாரண மக்களை சென்றடையவில்லையென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் விமர்சித்துள்ளார்.

மேலும், ஏற்றுமதி சார்ந்த, அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் மூலம் பிரச்சினைகளிலிருந்து வெளிவருவது என்பது தனது கொள்கையாகும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT