இலங்கையிலுள்ள அனைத்து ஜனநாயக, மிதவாத அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து வெற்றிப்பாதையில் பிரவேசிக்க அழைப்பு விடுப்பதாக பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
‘ஒரு வெற்றி நாட்டுக்கு தைரியத்தின் சேர்க்கை’ என்ற தொனிப்பொருளில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (05) கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக 2024 செப்டெடம்பர் 5 ஆம் திகதி வரலாற்றில் குறிக்கப்படும். இலங்கையின் வரலாற்றின் மிதவாத ஜனநாயகக் கட்டமைப்பில் இதுபோன்ற பல நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1935 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கை சமசமாஜக் கட்சி நிறுவப்பட்டது. இடதுசாரி அரசியல் கட்சிகளின் மக்கள் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர். 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2 ஆம் திகதி எஸ். டபிள்யூ. டபிள்யூ. ஆர். டி.பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய நாள்
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நாளை பின்னோக்கி பார்த்தால், பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி ஸ்தாபிக்கப்பட்ட இந்நாள் வரலாற்றில் பொன்னான நாளாகவும் குறிக்கப்படும். அதற்கு 1935ஆம் ஆண்டு இடதுசாரி சோசலிச முகாமின் பிள்ளைகள் எங்கள் முகாமில் உள்ளனர். 56 புரட்சியின் குழந்தைகளின் குழந்தைகள் எங்களுடன் இருக்கிறார்கள். அண்மைக்கால வரலாற்றில் இலங்கை அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகள் எம்முடன் உள்ளனர்.
1935ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமூகப் புரட்சியின் முன்னோடியாக இருந்த அமைச்சர் பிலிப் குணவர்தனவின் மூத்த புதல்வர் தினேஷ் குணவர்த்தன எமது புதிய கூட்டணியையும் முன்னணியையும் வழிநடத்திச் செல்வதை எமக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகின்றோம்.
1956 இல் பண்டாரநாயக்காவுடன் இணைந்து பிலிப் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெற்றி பெற்றார் எனத் தெரிவித்துள்ளார்.