பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மகளிர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன பங்கேற்கும் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் சுற்று போட்டியில் அவர் இன்று பங்கேற்கவுள்ளார்.
இலங்கை நேரப்படி இரவு 11.15க்கு போட்டி ஆரம்பமாகும். 50 வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர். முதற் சுற்றில் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் 6வது போட்டியில் தருஷி கருணாரத்ன பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.