Local

புதிய சரித்திரம் படைத்தார் ஜோ ரூட்: பிரையன் லாராவின் சாதனை முறியடிப்பு

Monday, 29 July 2024 - 7:33 am

இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதன்படி, மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) பருவங்களில் தொடர்ச்சியாக 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரூட் பெற்றுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 87 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவர் ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட் 2023-25 பருவத்தில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் 1023 ஓட்டங்களை குவித்துள்ளார். 2019-21 பருவத்தில் 20 போட்டிகளில் 1660 ஓட்டங்களையும், 2021-23 பருவத்தில் 22 போட்டிகளில் 1915 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

ஜோ ரூட்டைத் தவிர, இந்திய நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 2023-25 ​​சுழற்சியில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பருவங்களில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே இரண்டு முறை 1000 ஓட்டங்களை கடந்துள்ளனர்.

இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிரையன் லாராவை (11,953) ஜோ ரூட் முந்தியுள்ளார்.

மேலும் டெஸ்டில் 12,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் ரூட் ஆவார். 143 டெஸ்ட் போட்டிகளில் 261 இன்னிங்சில் ஜோ ரூட் இந்த மைல்கல்லை எட்டினார்.

தற்போது டெஸ்ட போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் 12,027 ஓட்டங்களுடன் ஜோ ரூட் ஏழாவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை எட்டிய இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையையும் ரூட் பெற்றுள்ளார். ரூட் 33 வயது 210 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT