International

காசு வாங்கி டிமிக்கி கொடுத்த நடிகை சிம்ரனுக்கு ரெட் கார்ட்!

Saturday, 17 August 2024 - 9:15 am

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை சிம்ரன் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்துடன் பல ஆண்டுகள் கழித்து அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் சிம்ரன் நடித்திருக்கிறார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் சிம்ரன் பற்றிய ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தற்போது ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் சிம்ரனுக்கு தெலுங்கு சினிமாவில் ரெட் கார்ட் போடப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு அவருக்கு டேட் கொடுக்காமல் வேறொரு முன்னணி நடிகரின் படவாய்ப்பு கிடைத்ததும் அந்த படத்தில் நடிக்க கமிட்டாகி சென்றிருக்கிறார் நடிகை சிம்ரன்.

இதனையடுத்து ஆந்திர தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்ரன் மீது அந்த தயாரிப்பாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் சிம்ரன் மீது ஆக்‌ஷன் எடுத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாதபடி செய்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிம்ரன் 5 லட்சம் ரூபாய் ஃபைன் கட்டி பின் அவரை மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க அனுமதித்து இருக்கிறார்களாம். இதனை தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Top Stories
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

Trending
wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.


NEWS ALERT