Local
1250 முன்னணி பாடசாலைகள் நட்பு பாடசாலைகளாக அபிவிருத்தி அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை
Tuesday, 30 July 2024 - 3:37 pm
நாட்டிலுள்ள 1,250 முன்னணிப் பாடசாலைகள் வெகு விரைவில் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சால் நேரடியாக நிர்வகிக்கப்படுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்திட்டத்திற்காக சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி பெறப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான அனைத்து வகுப்பறைகளையும் சிநேகபூர்வ வகுப்பறைகளாக மாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அவர்:புதிய கல்வி முறை தொடர்பான முன்னோடித் திட்டம் அடுத்த வருடம் அமுல்படுத் தப்படும்.இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.இப்புதிய திட்டம் தரம் 01, தரம் 06 மற்றும் 10 வகுப்புகளுக்கு அமுல்படுத்தப்படும். இதற்கு தேவையான கற்றல் தொகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவையான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அச்சுபதிவுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.