Local

வீசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு செப். 01 முதல் ஒக் 31 வரை அமுல்

Monday, 02 September 2024 - 7:28 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு நேற்று 01 ஆம் திகதி முதல் இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று செப்டம்பர் 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை 02 மாதம் பொது மன்னிப்பு காலத்தை வழங்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்கள், சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில் வழங்குநர்களின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியேறுபவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது உரிய விசா உள்ளிட்ட ஆவணங்களை சட்டப்பூர்வமாக தயாரிக்கவோ அபராதம் செலுத்தாமல் இருப்பதற்கோ வாய்ப்பு கிடைக்கும்.

பொதுமன்னிப்புக் காலப்பகுதியில் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையருக்கு தூதரக சேவைகளை வழங்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தூதரக சேவைகளுக்கு மேலதிகமாக, டுபாயிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும்,

அபுதாபியிலுள்ள இலங்கை தூதரகம் ஆலோசனை ஆதரவு சேவைகளுக்காக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை திறந்திருக்கும்.

இப்பொதுமன்னிப்பு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக பயண ஆவணங்களை இலங்கையிடம் கோருவரென எதிர்பார்க்கப்படுவதாக டுபாயிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தின் போது, ​​ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர், உரிய வீசாவை சட்டரீதியாக தயார் செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவர்களைக் கோரியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தால், தமக்கு அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT