அம்பாறை மாவட்டத்திலுள்ள 442 பாடசாலைகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதியினை ஏற்படுத்துவதோடு AI தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து தொழிநுட்ப கற்கை நெறிகளையும் ஆரம்பித்து, அம்பாறை மாவட்டத்தை தொழிநுட்ப கல்வியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு குளம் உள்ளிட்ட அனைத்து விவசாய குளங்களையும் புனரமைப்பதோடு விவசாயிகளுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரான வெ.வினோகாந்தின் அழைப்புக்கமைய, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட அரச தலைவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.