Sports

பரிஸ் பாராலிம்பிக் தொடக்க விழா கோலாகலமாக ஆரம்பம் - பாராலிம்பிக் தொடரின் ஜோதியை ஏந்தி சென்ற ஜாக்கி சான்

Friday, 30 August 2024 - 10:25 am

17ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பரிசில் நேற்று (28) கோலாகலமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாராலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல ஆக்சன் நடிகர் ஜாக்கி சான் ஏந்தி சென்றார்.

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மிகவும் மோசமாக நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதில் சொல்லும் விதமாக பாரா ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை சிறப்பாக பிரான்ஸ் நடத்தியது.

இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாராலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது. பரிஸில் முக்கிய பகுதியான லா கான்கோர்டு என்ற இடத்தில் இந்த தொடக்க விழா நடந்தது.

இதில் 140 நடன கலைஞர்கள் பங்கேற்று கண்கவரும் நடனத்தில் ஈடுபட்டனர். இந்த தொடக்க விழாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்கரான் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் கலைஞர் கிறிஸ்டின் குழுவினர் நடத்திய இசை கச்சேரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்டு படி சென்றது.

 இந்தத் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற சுமித் ஆண்டில்க்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் என்ற பாக்கியஸ்ரீ ஜாதவ்க்கும் கிடைத்தது.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT