ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்த கருத்து சரியானது. அது சிறந்த நடவடிக்கை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, சஜித் பிரேமதாசவிடம் நான் கோரினேன்.
சஜித், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தலதா சிறந்த யோசனையை முன்வைத்ததாகவே, நான் கூற வேண்டும்” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெற்றியீட்ட முடியுமென சஜித் பிரேமதாச இன்னமும் நம்புவதால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளத் தயங்குகிறார். இதனால் கட்சியின் நிலை குறித்து ஏமாற்றமடைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ரணிலுடன் இணைய காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தீவிரமடையும்போது அவர்கள் அவ்வாறு செய்வார்கள்” என்று அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.