Local

கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகத்திற்கு நடவடிக்கை - வரட்சி காரணமாக நீரின்மை, அதிகரித்த பயன்பாடே காரணம்

Wednesday, 31 July 2024 - 9:39 pm

தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்களின் நீர்ப் பாவனை வழமைக்கு மாறாக அதிகமாக காணப்படுகின்றது.
கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகம் அறிவித்துள்ளது.
எனவே இதன் காரணமாக தற்காலிகமாக குறிப்பிட்ட காலம் வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு நீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் பூநகரி, பொன்னகர், பாரதிபுரம், விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் காலை 5.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நீரை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் குறைந்த அழுதத்தில் நீர் விநியோகம் காணப்படுவதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT